August 11, 2026, 2:41 pm
கன்னியாகுமரியில் 1000 கிலோ பொது விநியோகத் திட்ட அரிசி பறிமுதல் - ஒருவர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டம் பகுதியில் பறக்கும் படை தனி வட்டாட்சியர் பாரதி தலைமையில், துணை வட்டாட்சியர் சிவந்தி, இளநிலை வருவாய் ஆய்வாளர் தினேஷ் ஜான் பிரைட் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
கோட்டார் அருகில் கன்னார்குடி தெருவில் உள்ள கணபதி என்பவரது வீட்டில் கேரள மாநிலத்திற்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1000 கிலோ பொது விநியோகத் திட்ட அரிசி கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
கடத்தலில் ஈடுபட முயன்ற கணபதி குடிமைப் பொருள் குற்றவியல் காவல் ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டார்; பறிமுதல் செய்யப்பட்ட அரிசி கோணம் அரசு கிட்டங்கியில் சேர்க்கப்பட்டது.
பகிரவும் (Share this news):