August 13, 2026, 4:11 pm
தோவாளை வட்டத்தில் "உங்களைத்தேடி உங்கள் ஊரில்" திட்டம்: ஆகஸ்ட் 19 மற்றும் 20-ல் கள ஆய்வு முகாம்!
திட்டம்: "உங்களைத்தேடி உங்கள் ஊரில்" அரசின் சிறப்புத் திட்டம்.
இடம்: தோவாளை வட்டத்தில்.
காலம்: 19.08.2026 காலை 9.00 மணி முதல் 20.08.2026 காலை 9.00 மணி வரை.
முக்கிய அம்சங்கள்:
மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து துறை முதல் நிலை அலுவலர்கள் வட்ட அளவில் தங்கி கள ஆய்வு செய்வார்கள்.
அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து மக்களின் குறைகளைக் கேட்டறிவர்.
பொதுமக்கள் சந்திப்பு: 19.08.2026 அன்று பிற்பகல் 4.30 மணி முதல் 6.00 மணி வரை தோவாளை வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் சந்திப்பு நடைபெற்று கோரிக்கை மனுக்கள் பெறப்படும்.
கோரிக்கை: தோவாளை வட்டார மக்கள் இந்த அறிய வாய்ப்பினைப் பயன்படுத்தி அரசின் நலத்திட்டங்களை முழுமையாகப் பெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.