August 13, 2026, 2:53 pm

உலக யானைகள் தினத்தில் நேர்ந்த சோகம்: தமிழக - கேரள எல்லையில் ரயில் மோதி 2 யானைகள் உயிரிழப்பு.

உலக யானைகள் தினத்தில் நேர்ந்த சோகம்: தமிழக - கேரள எல்லையில் ரயில் மோதி 2 யானைகள் உயிரிழப்பு.
உலக யானைகள் தினத்தில் நேர்ந்த சோகம்: தமிழக - கேரள எல்லையில் ரயில் மோதி 2 யானைகள் உயிரிழப்பு. தமிழ்நாடு - கேரளம் எல்லையையொட்டி அமைந்துள்ள பாலக்காடு மாவட்டத்தின் வாளையார் பகுதியில் 4 யானைகள் கொண்ட கூட்டம், நேற்று புதன்கிழமை (ஆகஸ்ட் 12) இரவு ரயில் பாதையை கடந்துள்ளது. அப்போது அவ்வழியாக வந்த மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் யானைகள் மீது மோதியது. இந்த விபத்தில் ரயில் என்ஜின் சக்கரங்களில் சிக்கி தாய் மற்றும் குட்டி என 2 யானைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.
பகிரவும் (Share this news):