August 17, 2026, 9:54 am

தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொலை: முதல்வர் விஜய் கண்டனம்!

3 tamilians killed by karnataka forest officers on August 15 2026
- கர்நாடகாவின் ஹூனூர் தாலுகாவில் வசித்து வந்த தமிழர்களான அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர், குமார் ஆகியோர் காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில் கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். - இந்தச் சம்பவம் வேதனை அளிக்கிறது; படுகொலையை வன்மையாகக் கண்டிக்கிறேன். - சம்பவம் தொடர்பாக கர்நாடக வனத்துறை அளித்த விளக்கம் ஏற்புடையதல்ல - நேர்மையான விசாரணை நடத்தி, உயர்மட்ட விசாரணைக் குழு அமைத்து, தவறிழைத்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். - உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கர்நாடக அரசு வழங்க வேண்டும்; இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். - முதல்வர் விஜய்