August 27, 2026, 5:46 pm

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூதன போராட்டம்: 5 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காததால் கலெக்டரிடம் வெற்று காகிதத்தை மனுவாக அளித்த விவசாயி!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர விவசாய குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, விவசாயி ஒருவர் நூதன முறையில் வெற்று காகிதத்தை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து பல கோரிக்கைகளை மனுக்களாக அளித்தும் துறை சார்ந்த அதிகாரிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் விரக்தியடைந்த அவர், இந்த விசித்திரமான எதிர்ப்பைப் பதிவு செய்தார். அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடைபெற்ற இந்தச் சம்பவம் கூட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.