August 17, 2026, 10:34 pm

தேசிய கொடியேற்றுவது போன்று மது பாட்டிலை வைத்து ரீல்ஸ் வீடியோ

குமரி மாவட்டம் குளச்சல் அருகே செம்பொன்விளையைச் சேர்ந்த ஓட்டுநர் கிஷோர் (31). இவர் தேசிய கொடியேற்றுவது போன்று மது பாட்டிலை வைத்து ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், குளச்சல் போலீசார் கிஷோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இவர் பெண்கள் குறித்து அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.