August 19, 2026, 9:43 am
🚨குமரியில் சரியான பதிவு எண் இல்லாத வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை
ஆகஸ்ட் 18, 2026.
✨ZERO ACCIDENT KUMARI என்ற இலக்கை நோக்கி செயல்பட்டு வரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்கள் சாலை விதிமீறல்களில் ஈடுபடும் நபர்கள் மீதும் இருசக்கர வாகனங்கள் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
✨ உத்தரவின் படி கன்னியாகுமரி போக்குவரத்து போலீசார் நடத்திய வாகன சோதனையில்,
* சரியான பதிவு எண் (Number Plate)இல்லாதது
* ஓட்டுநர் உரிமம் (Driving License) இல்லாதது,
* விதிகளுக்குப் புறம்பாக ஆல்டரேஷன் (Modification)
செய்யப்பட்டிருந்த 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன
✨விதிமீறலில் ஈடுபட்ட மூன்று நபர்களுக்கும் ₹20,000 அபராதம் விதிக்கப்பட்டு, போக்குவரத்து போலீசாரால் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
✨ வாகன ஓட்டிகள் வாகன ஆவணங்களைச் சரியாக வைத்திருங்கள். சாலை விதிகளை மதித்து, விபத்தில்லா குமரியை உருவாக்க மாவட்ட காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குங்கள்!