August 25, 2026, 5:58 pm
கோட்டார்: ஏழகர பெருமாள் கோவில் தேரோட்டப் பணியின்போது விபத்து - மின்வாரிய ஊழியர் அரவிந்த் படுகாயம்! த.வெ.க. நிர்வாகிகள் நேரில் ஆறுதல்.
நாகர்கோவில், கோட்டார் ஏழகர பெருமாள் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு, வழக்கம் போலத் தேரோட்டம் நடைபெறும் தெருக்களில் மின் வயர்களை மாற்றும் பணி இன்று காலை நடைபெற்றது.
இந்தப் பணியில் தெங்கம்புதூர் பகுதியைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர் அரவிந்த் ஈடுபட்டிருந்தார். அவர் மின் வயர்களை மாற்றி அமைத்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக உயர் அழுத்த மின் கம்பி மீது மற்றொரு கம்பி உரசியதில், மின்சாரம் தாக்கி அரவிந்த் தூக்கி வீசப்பட்டார்.
மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த தகவல் அறிந்ததும், த.வெ.க. (TVK) மாவட்டச் செயலாளர் மாதவன், இணைச் செயலாளர் பிரேம்குமார் மற்றும் தொழிலதிபர் பால்ராஜ் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று, சிகிச்சை பெற்று வரும் அரவிந்தைப் பார்வையிட்டு நலம் விசாரித்தனர். மேலும், அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர்.