September 13, 2026, 10:08 pm
மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய மரநாய் மீட்பு
-கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டம் தாழக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட கீழரத வீதி தேர் நிலையம் அருகில் மின்சாரம் தாக்கி மரநாய் ஒன்று உயிருக்கு போராடியது.
- இதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
- தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிருக்கு போராடிய மரநாயை மீட்டு தாழக்குடி கால்நடை மருத்துவமனையில் சேர்த்தனர்.
- அங்கு கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்கு பின் மரநாய் அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் என தெரிவிக்கப்பட்டது
பகிரவும் (Share this news):