September 13, 2026, 10:11 pm

நாகர்கோவிலில் 'வீ தி லீடர்ஸ்' இயக்கம் சார்பில் போதை மற்றும் பசுமை விழிப்புணர்வு மாபெரும் பேரணி: ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், 'வீ தி லீடர்ஸ்' இயக்கத்தின் சார்பில் போதை இல்லாத தமிழகம், பசுமையான தமிழகம், ஆரோக்கியமான தமிழகம் மற்றும் வளமான தமிழகம் ஆகியவற்றை வலியுறுத்தி மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மக்கள் சேவகரும், 'வீ தி லீடர்ஸ்' இயக்க நிர்வாகியுமான இ.எஸ். சகாயம் ஒருங்கிணைப்பில் இப்பேரணி மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு பேரணியில் பெண்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு தரப்பட்ட மூத்த நிர்வாகிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரளாகக் கலந்துகொண்டனர். போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற கோஷங்களை முழங்கியவாறும், விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறும் அவர்கள் ஊர்வலமாகச் சென்றனர். வடசேரி எம்.ஜி.ஆர். சிலை முன்பு தொடங்கிய இந்தப் பேரணி, மணிமேடை வழியாகவும், பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையின் முன்பாகவும் கடந்து, இறுதியாக வடசேரி பேருந்து நிலையம் வழியாகச் சென்று மீண்டும் எம்.ஜி.ஆர். சிலையை அடைந்து நிறைவுபெற்றது.
பகிரவும் (Share this news):