October 3, 2026, 10:09 am

ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த நபரை தாக்கியது தொடர்பான காவல்துறையினரின் விளக்கம்.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை
ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த நபரை தாக்கியது தொடர்பான காவல்துறையினரின் விளக்கம். வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் காவல் சரகத்திற்குட்பட்ட சொத்தவிளை பகுதியில் உள்ள Moon Trukal Trust Guest House வளாகத்தில் சுற்றுலா விசா மூலம் இந்தியாவிற்கு வந்த ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த Thomas Korostensky (60) என்பவர் தங்கி வருகிறார். இந்நிலையில், 02.10.2026 அன்று சுமார் 12.10 மணியளவில், Thomas Korostensky என்பவர் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து சுசீந்திரம் செல்வதற்காக SETC பேருந்தில் பயணம் செய்தபோது, முன்னாள் ராணுவ வீரர் திரு. பாபு என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டு பின் கைகலப்பாக மாறியதில் Thomas Korostensky என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமான புகாரின் அடிப்படையில் கோட்டாறு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தாக்கிய நபரை கைது செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காயம் பட்ட வெளிநாட்டவர் Thomas Korostensky என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சம்பவம் தொடர்பாக உறுதி செய்யப்படாத தகவல்கள் அல்லது வதந்திகளை பரப்பாமல், காவல்துறையின் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே பொதுமக்கள் நம்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பகிரவும் (Share this news):