August 11, 2026, 2:45 pm
RTO Challan பெயரில் பரவும் மால்வேர் APK ஆபத்து – கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை
வாட்ஸ்அப்பில் “RTO Challan”, “Traffic Fine”, “e-Challan” போன்ற பெயர்களில் வரும் போலியான APK கோப்புகளை பொதுமக்கள் பதிவிறக்கம் செய்யவோ அல்லது திறக்கவோ வேண்டாம் என கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.
இத்தகைய APK கோப்புகளை கிளிக் செய்வதன் மூலம் மால்வேர் (Malware) நமது கைப்பேசிக்குள் நுழைந்து, தனிப்பட்ட தகவல்கள், வங்கி விவரங்கள், ஓடிபி (OTP) மற்றும் பணத்தை திருட வாய்ப்புள்ளது.
அபராதம் செலுத்தச் சொல்லி அவசரம் காட்டும் இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான APK-களை நீக்குமாறும், சைபர் மோசடியில் பணம் இழந்தால் உடனடியாக 1930 என்ற உதவி எண்கyஐ தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.